Search
Keywords
Latest topics
Top posting users this month
No user |
புகைத்தல் சாவைத் தருமே!
3 posters
Page 1 of 1
புகைத்தல் சாவைத் தருமே!

தம்பி! புகைக்காதே தம்பி!
புகைத்துப் போட்டு நீ சாகாதே!
தம்பி! தம்பி! தம்பி!
தங்கச்சி! புகைக்காதே தங்கச்சி!
புகைத்துப் போட்டு நீ சாகாதே!
தங்கச்சி! தங்கச்சி! தங்கச்சி!
"புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு" என
எச்சரிப்பது வெறும் பொய்யல்ல - அது
உன் உயிரைக் குடிக்குமென்ற மெய்யே!
புகைக்கத் துணிந்த உனக்கு - இந்த
உண்மையை உணர நேரமிருக்காதே! - நீ
சாகத் துடிக்கும் போதே படிப்பாய்!
மாரடைப்பு, புற்றுநோய் மட்டுமல்ல
ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு என
பாலியல் நாட்டமின்மை, மலட்டுத் தன்மை என
நோய்களின் பட்டியலைப் போட்டு நீட்டி
புகைத்தல் தரும் பரிசில்கள் எனப் பகிரும்
விளம்பரங்களை நம்பிப் புகைப்பது சரியாகுமோ?
ஒவ்வொரு சுருட்டும் புகைக்கும் வேளை
உடலுக்கு உள்ளே புகையை உறிஞ்சுவாய்
உன் வாழ்வில் 11 மணித்துளியை இழப்பாய்
நோய் எதிர்பு சக்தியை இழப்பாய் - அதனால்
நோய்கள் வந்து உன்னுடலில் குந்தியிருக்க
புகைத்தல் உன்னுயிரைக் குடிப்பது உறுதியே!
புகைக்காதே தம்பி! தங்கச்சி!
வாழவே முடியாமல் சினுங்காதே!
சாகத் துடிக்கையிலே அழுவாதே!
புகைத்துப் போட்டு நீ சாகாதே!
தம்பி! தம்பி! தம்பி!
தங்கச்சி! தங்கச்சி! தங்கச்சி!
Re: புகைத்தல் சாவைத் தருமே!
சிறப்பு, பாராட்டுகள்
படமாக இணைக்காமல் தட்டச்சுச் செய்து இணைத்தால் தளம் வேகமாக இயங்கும்.
படமாக இணைக்காமல் தட்டச்சுச் செய்து இணைத்தால் தளம் வேகமாக இயங்கும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» புகைத்தல் சாவைத் தருமே!
» திருக்குறள் கதைகள்
» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…
» மின்நூல் களஞ்சியங்கள்
» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்?
» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே!
» மின்நூல்கள்
» மின்இதழ்கள்