Search
Keywords
Latest topics
Top posting users this month
No user |
தங்களை வரவேற்கிறோம்!
Page 1 of 1
தங்களை வரவேற்கிறோம்!

உலகிலுள்ள தமிழ்ப் பதிவர்கள் எல்லோரையும் வரவேற்கிறோம். உங்கள் அடையாளத்துடன் உங்கள் அறிவினைத் திரட்டி உலகத் தமிழ் வாசகர்களுக்குத் தேவையான "தமிழ் இலக்கிய வழி" வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்கலாம் என எண்ணியுள்ளோம்.
தமிழ் மொழி ஆய்வு மின்நூல்கள், பொது வழிகாட்டல் மின்நூல்கள் ஆகிய வெளியீட்டிற்கான பதிவுகளையும் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம். நாம், எமது அறிவை, ஆற்றலை நாளைய வழித்தோன்றலுக்கு வழங்க இத்தளம் உதவும்.
தங்கள் அடையாளம் என்றதும் முகவளவு படம், புனைப்பெயர், உண்மைப்பெயர், நடைபேசி இலக்கம், உண்மையான முகவரி, மின்னஞ்சல் முகவரி, இணையத்தள முகவரி, மற்றும் கல்வித் தகமை, சிறப்புத் தகமை யாவும் தளத்தில் Profile பகுதியில் இடவும்.
போலித் தகவல் (Fake ID) இடவேண்டாம். மின்இதழிலும் மின்நூல்களிலும் சிறந்த பதிவிற்கான பரிசினை நாம் வழங்கினாலும் தங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லையே! தங்களது உண்மைத் தகவலுக்கே பரிசினை எம்மால் அனுப்பிவைக்க இயலும்.
பயனுள்ள சிறந்த பதிவுகளை வழங்கி எமக்கு ஒத்துழைப்புத் தருவீர்கள் என நம்புகின்றோம். வருக அறிஞர்களே! தங்கள் நட்பு அறிஞர்களையும் அழைத்து வருக!
Last edited by Admin on Mon Apr 09, 2018 5:30 am; edited 1 time in total (Reason for editing : பந்தி ஒழுங்கமைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» புகைத்தல் சாவைத் தருமே!
» திருக்குறள் கதைகள்
» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…
» மின்நூல் களஞ்சியங்கள்
» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்?
» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே!
» மின்நூல்கள்
» மின்இதழ்கள்